ஒரு ஊரில் குமார் தன் வயதான தந்தையை வீட்டில் வைத்து தன் குடும்பத்தோடு கவனித்து வந்தான். இதனால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துக்கொண்டு இருந்தது.
ஒரு நாள் தன் அவன் தன் தந்தையை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட எண்ணி மகனையும் அழைத்துக்கொண்டு முதியோர் இல்லத்திற்க்கு சென்றான்.
தன் தந்தையை அங்கே சேர்த்துவிட்டு வீடு திரும்ப வெளியே வந்ததும் மகன் சிறிது நேரம் அந்த முதியோர் இல்லத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். குமார் அவனிடம் போய் இங்கே என்ன செய்கிறாய் என வினவினான். அதற்கு அவன் இல்லை அப்பா நான் உங்களை போல் பெரியவன் ஆனதும் நீங்கள் தாத்தாவை போல் ஆகிவிடுவீர்கள் அப்போது நான் உங்களை இங்கேதானே கொண்டு வந்துதானே விடனும் அதனால்தான் பார்த்துக்கொண்டு இருக்கேன் என் கூறினான். அப்பொதுதான் குமார் தன் தவறை உணர்ந்து தன் தந்தையை திரும்பவும் வீட்டுக்கே அழைத்து சென்றுவிட்டான்.
பிள்ளைக்களுக்கு தன் பெற்றோரே முதல் ஹீரோ அவர்களை பார்த்துதான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். நாம் அவர்களுக்கு நல்லதையே விதைப்போம். மற்ற பிள்ளைகளிடம் ஒப்பிட்டு பேசாமல் அவர்கள் கணவன் மனைவி சண்டை போடாமல் மதிப்புள்ள பெற்றோராக இருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக