ஒரு நாள் இரு நண்பர்கள் பாதையில் நடந்து செல்லும்போது ஒரு கரடி வருவதை கவனித்தனர். இருவரும் செய்வதறியாது சிறிதுநேரம் திகைத்தனர்.
கரடி அருகில் வந்ததும் ஒரு நண்பன் மரத்தின்மீது ஏறி ஒளிந்துக்கொண்டான். மற்ற நண்பனுக்கு மரம் ஏற தெரியாமல் திகைத்து திடீர் என்று கீழே படுத்து இறந்தவன் போல மூச்சு விடாமல் அப்படியே கிடந்தான்.
கரடி அவனருகில் வந்து காதோரம் நன்றாக முகர்ந்து பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு திரும்பவும் வந்த வழியே போய்விட்டது.
கரடி போனதும் மரத்தில் இருந்து மற்ற நண்பன் இறங்கி வந்து கரடி
உன் காதில் வந்து என்ன சொன்னது என்று கேட்டான். அதற்கு அந்த நண்பன் சொன்னான் உற்ற நண்பனை ஆபத்தில் தெரிந்துக்கொள்ளலாம் உன் நண்பனை நம்பாதே உனக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்ததும் தன் உயிர் முக்கியம் என்று உன்னை காப்பாற்றாமல் அவனை மட்டும் காப்பாற்றிக்கொண்டான் அவனை நம்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றது என்று கூறிவிட்டு போய்விட்டான்.

நல்ல நண்பன் எப்போதும் தன் நண்பனுக்காக எதையும் எதிர்பார்க்காமல் செய்வான் அவனே உயிர் நண்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக