ஒரு காட்டில் ஒரு வளர்ப்பு நாய் ஒன்று வழி தவறி சென்று மாட்டிக்கொண்டது. செய்வதறியாது காட்டிலே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு திரிந்தது.
அந்த நேரம் அவ்வழியே ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தை கண்ட நாய்க்கு நடுங்கிப்போய் திகைத்தது. பிறகு சிங்கம் வரும் எதிர்ப்பக்கமாக முதுகை மட்டும் காட்டிக்கொண்டு அமர்ந்தவாறு அங்கு கிடந்த இறைச்சி துண்டை சாப்பிடுவது போல பாசாங்கு செய்தவாறு இந்த இறைச்சி என் பசிக்கு போதவில்லையே இந்த நேரம் சிங்கம் ஒன்று இருந்தால் அதை பிடித்து பசியை போக்கிக்கொள்ளலாம் என்று தனக்குத்தானே சத்தமாக பேசிக்கொண்டு இருந்தது.
இதை கண்ட அச்சிங்கமோ ஏற்கனவே களைப்புற்று வருகிறேன் இந்நேரம் இந்த மிருகத்தை சமாளிக்க முடியாது என்று வந்த வழியே ஓடிப்போனது. நாயின் பின்புறம் பார்த்ததால் சிங்கம் இது ஒரு அபூர்வ மிருகம் என எண்ணி ஓட்டம்பிடித்தது.
இதையெல்லாம் மரத்தில் இருந்து கவனித்த ஒரு குரங்கு விரைவாக சென்று சிங்கத்திடம் நடந்த உண்மையை கூறியது. சிங்கம் கோவமாக திரும்ப வந்தது.
இந்நேரம் நாயோ மறுபடியும் முதுகை காட்டிக்கொண்டு அமர்ந்தவாறு . காட்டிற்கு போய் ஏதாவது சிங்கம் ஒன்றை ஏமாற்றி கூட்டி வருமாறு குரங்கை அனுப்பினோம். இன்னும் காணவில்லையே என்னால் பசியை அடக்க முடியவில்லையே என மீண்டும் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தது.
சிங்கம் மருபடியும் பயந்து ஓடியே போய்விட்டது.
நமக்கு வரும் பிரச்சினைகளை நாமே சமாளிக்க கூடிய வல்லமையை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். நாம் நமது மூளையை பயன்படுத்தி நன்றாக யோசித்து சரியான முடிவெடுத்தால் எல்லா பிரச்சினைகளையும் முகங்கொடுக்கக்கூடிய திறமை வந்துவிடும்.