அவனுக்கோ விடை தெரியவில்லை. ஆசிரியருக்கு ஏற்கனவே அவன் மீது இருந்த கோபம் எல்லாம் சேர்த்து நன்றாக் திட்டினார். கடைசியில் கோபத்தின் உச்சியில் நாய், பேய் என்று திட்டினார். அவனுக்கு அது என்ன என்று கூட தெரியவில்லை.
வீடு போய் தந்தையிடம் அப்பா நாய் என்றால் என்ன என்று கேட்டான் அதற்கு அத்தந்தையோ ஏற்கனவே அவருக்கும் அவர் மனைவிக்கும் ஏற்பட்ட சண்டையினால் அவர் நான் தான் நாய் அதனால்தான் உன் அம்மா என்னை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள் என்றார். அவன் மீண்டூம் அப்போ பேய் என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு தந்தை பேய் என்றால் உன் அம்மா அதனால்தான் எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறாள் என்றார்.
அவனுக்கோ இப்போ ரொம்பவும் சந்தோஷம் ஆசிரியர் என்னை நன்றாக தானே ஏசி இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டான். அடுத்த நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது நன்றாக உறங்கி விட்டான். ஆசிரியரிடம் இன்றும் நன்றாக திட்டு வாங்கினான். இன்று தண்டம், முண்டம் என்று ஏசினார். வீடு சென்றவுடன் நேரே தந்தையிடம் போய் அப்பா தண்டம் என்றால் என்ன என்று கேட்டான் அதற்கு தந்தை தண்டம் என்றால் ஒரு வேலையும் செய்யாமல் வெட்டிச்சோறு தின்பவர்களை தான் தண்டம் என்று சொல்வாங்க உதாரணத்துக்கு நம்ம சொந்தக்காரங்க மாதிரி என்றார். அதற்கு அவன் அப்போ முண்டம் என்றால் என்ன என்றுக் கேட்டான். முண்டம் என்றால் தலை இல்லாதது முண்டம் உதாரணத்துக்கு வீட்டில் உள்ள மேசை கதிரை இவைகள்தான் முண்டம் என்றார்.
அடுத்த நாள் விடுமுறை அப்பா TV பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள். அப்போது சில உறவினர்கள் வீட்டுக்கு வந்தனர். அச்சிறுவன் உடனே ஓடிப் போய் வாங்க தண்டங்களா வந்து இந்த முண்டத்தில் உற்காருங்க நாய் TV பார்க்குது பேய் பாத்திரம் எல்லாம் கழுவிக் கொண்டு இருக்குது என்று சொன்னான்.
பிள்ளைகள் சந்தேகம் என்று ஏதாவது கேட்டால் சரியான பதிலை சொல்ல வேண்டும் இல்லையெனில் பிறகு சொல்கிறேன் என்று சொல்ல வேண்டும் இல்லையெனில் பிறர் முன்னிலையில் இப்படி அவமானப்பட வேண்டி வரும்.